நல்லூரில் அடைமழையிலும் தொடரும் போராட்டம்! குவியும் மக்கள்

காணாமல் போன தமது உறவுகளை தேடி தருமாறும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கூறி நல்லூரில் இன்று அடை மழையிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள், யுத்தத்திற்கு பிறகு விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என காணாமல் போனவர்களின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

இந்த போராட்டம் இதோடு நின்றுவிடாது. நாடெங்கிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும். என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மிகவும் மனவேதையில் இவர்கள் காணப்படுகின்றார்கள். வெள்ளை வானில் வந்தவர்கள் எனது மகனை கடத்தினார்கள் எனவும் 10 வருடங்களாகியும் இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கண்ணீர்மல்க ஒரு தாய் தெரிவித்தார்.

கொட்டும் மழையிலும் இந்த பாவப்பட்ட தமிழ் மக்கள் தமது சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

மேலும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad