தந்தை, சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரை கோடரியால் வெட்டிக் கொலை செய்த பதினேழு வயது இளைஞன்.

தன் தந்தை, சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரை கோடரியால் வெட்டிக் கொலை செய்த பதினேழு வயது இளைஞனை ரஷ்ய பொலிஸார் கைது செய்தனர்.

அலெக்ஸாண்டர் என்ற இந்த இளைஞனின் தாய் மூன்று வருடங்களுக்கு முன் புற்றுநோய்க்கு பலியானார். தன் தாயின் மரணம் அலெக்ஸாண்டரை உலுக்கிவிட்டது. அன்று முதல் நண்பர்களைக் கூட ஒதுக்கிவிட்டு தனிமரமாக வாழத் தொடங்கியிருக்கிறார் அலெக்ஸாண்டர்.

இதனிடையே, அலெக்ஸாண்டரின் தந்தை விக்டர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். இது அலெக்ஸாண்டருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

(கொல்லப்பட்ட தந்தை, சகோதரி)

குடும்பத்தை விட்டு விலகிச் சென்றுவிடத் தீர்மானித்த அலெக்ஸாண்டர் சுமார் மூவாயிரம் யூரோக்களை தனது தந்தையிடம் கடனாகக் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன், இரவு நேரம் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் கோடரி ஒன்றைக் கையிலெடுத்த அலெக்ஸாண்டர், தந்தை, சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரின் அறைகளுக்குள் புகுந்து அவர்களை கோடரியால் கொத்திப் படுகொலை செய்தார்.

அலெக்ஸாண்டரைக் கைது செய்த பொலிஸார் அவரைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad