பிரித்தானியாவில் தொடர்ந்து வெடித்து சிதறிய வீடுகள் -வெடிப்பின் மர்மம்...

பிரித்தானியாவில் இன்று நடந்த பயங்கர வெடிப்பு விபத்தில் 2 வீடுகள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் முக்கிய நகரான மான்செஸ்டரின் Blackley என்ற இடத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த வீடும் அருகில் இருந்த மற்றொரு வீடும் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 3 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொலிசாரும், மீட்பு படையினரும் அழைக்கப்பட்டு தீவிரமாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags

Top Post Ad

Below Post Ad