பாலியல் தொல்லையால் தற்கெலை செய்து பேஸ்புக் லைவ்வில் பதிவேற்றிய 12 வயது சிறுமி.

ஜொர்ஜியாவில் கேட்லின் நிகோல் டேவிஸ் எனும் 12 வயது சிறுமி, தன்னை உறவினர் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கினார் என கூறி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தை பேஸ்புக் லைவில் பதிவு செய்து பதற்ற நிலையை உண்டாக்கியுள்ளார். ஃபேஸ்புக் லைவில் வந்த கேட்லின் தனக்கு நடந்த சம்பவத்தை கூறி தனது வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த காணொளிப்பதிவை பேஸ்புக் நீக்கி வருகிறது. ஆயினும், இது பல தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இதை தடுக்க முடியவில்லை என அப்பகுதி பொலிஸ் கூறியுள்ளது. கேட்லின் நிகோலின் தற்கொலை குறித்தும், பரவி வரும் காணொளிப்பதிவை எப்படி தடுப்பது என்பது குறித்தும் பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் பாலியல் குறித்தும், மன தைரியம் குறித்தும் விழிப்புணர்வும், ஆலோசனையும் குறைவாக இருக்கிறது. இது தான் இவர்கள் பல சமயங்களில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவறான முடிவு எடுக்க காரணியாக அமைகிறது.

அப்பா, அம்மா வேலையில் பிஸியாக இருக்கின்றனர். தாத்தா, பாட்டி என்ற உறவு பலருக்கு கிடைப்பதில்லை. இப்படி பெரியோரிடம் ஈர்ப்பும், பற்றும், உறவும் என எதுவும் இல்லாத காரணத்தால் வாழ்வில் மதிப்பும், எதை எதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றிய புரிதலும் குழந்தைகள் மத்தியில் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பெற்றோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர், யாருடன் பழகுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்களை பற்றி முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

Tags

Top Post Ad

Below Post Ad