பெண்ணிடம் தாய்ப்பால் சுரப்பு சோதனை - விமான நிலைய அதிகாரிகள் அடாவடி

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் ஒருவரிடம், ஜெர்மனி விமான நிலைய அதிகாரிகள் தாய்ப்பால் சுரப்பு சோதனை நடத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் காயத்ரி போஸ்(33). இவர் சமீபத்தில் ஜெர்மனி சென்றிருந்தார். அதன்பின் அங்கிருந்து பாரிஸ் நகருக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார். பாதுகாப்பு சோதனையின் போது, அவரது பையில் தாய்ப்பாலை குழந்தைக்கு உந்தி தள்ளும் ‘மார்பக பம்ப்’ கருவி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நிலையில், உங்களிடம் குழந்தை இல்லாத நிலையில் இதை எதற்காக எடுத்துச் செல்கிறீர்கள் என கிண்டல் அடித்துள்ளனர்.

காயத்ரிக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தையும் ஒரு 7 மாத குழந்தையும் உள்ளது. தன்னுடைய குழந்தைகளை சிங்கப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் விட்டு விட்டு வந்திருப்பதாகவும், குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எப்போதும் அந்த கருவி தன்னுடைய பையிலேயே இருக்கும் என அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், அங்கிருந்த பெண் அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்து சோதனை செய்யுமாறு கூறியுள்ளனர்.

அவர்கள் காயத்ரியின் மார்பகங்களை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறியதோடு, அந்த கருவியை கொண்டு குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பீர்களோ அதை செய்து காட்டுங்கள். உங்களுக்கு பால் சுரக்கிறதா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்களை நம்புவோம் என கூறியுள்ளனர். இதற்கு காயத்ரி மறுத்துள்ளார். ஆனால், அவரின் பாஸ்போர்ட்டை அவர்கள் பிடிங்கி வைத்திருந்ததால், வேறு வழியில்லாமல், அதை செய்து காட்டி வேண்டிய நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார்.

 அந்த சோதனை முடிந்த பின்பே, அவர் விமானத்தில் ஏற அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இது பற்றி பி.பி.சி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த காயத்ரி “ 45 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த பிறகுதான் எனக்கு நடந்தது என்பதே எனக்கு படிப்படியாக புரியத் தொடங்கியது. அதிகாரிகள் முன்பு எனது மார்பகங்களை காட்ட வற்புறுத்தப்பட்டேன் என்பதை நினைக்கும் போது எனக்கு அழுகையே வந்துவிட்டது. இது எனக்கு பெருத்த அவமானம். அந்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார். இந்த செய்தியை ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad