மில்டன் கீன்ஸ் கொலை. நடந்தது என்ன? சம்பந்தபட்டவர்கள் தரும் வாக்கு மூலம்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை, சுரேன் என்னும் கனேடிய தமிழர் பிரித்தானியாவின் மில்டன் கீன்ஸ் பகுதியில் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக நாம் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து 20 க்கும் மேற்பட்ட நபர்கள் எம்மோடு தொடர்புகொண்டு பல தகவல்களை வழங்கி வருகிறார்கள். இதில் குறித்த பெண் வீட்டார், அவரை தெரிந்தவர்கள். கொலைசெய்யப்பட்ட நபரது நண்பர், கொலை செய்துவிட்டு தற்போது சிறையில் உள்ள நபரின் நண்பர்கள் என பலரும் எம்மோடு தொடர்புகொண்டு, ஒன்றுக்கு பின் ஒன்று சம்பந்தமே இல்லாத தகவல்களை தருகிறார்கள். அவை என்ன என்று நாம் தருகிறோம். மக்களே நீங்கள் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் !

கொல்லப்பட்ட சுரேன்: இவர் கனடாவில் இருந்து எதற்காக லண்டன் வந்தார் ? பின்னர் எதற்காக மில்டன் கீன்ஸ் நகர் சென்றார் என்பது பற்றி இதுவரை எவரும் சரியான தகவலை தரவில்லை. இவர் சுகந்தா என்னும் பெண்ணோடு நட்புரீதியாக பழகியதாகவும். அவரை பார்க்கவே சென்றதாகவும். அவரை கூட்டிக்கொண்டு ஷாப்பிங் சென்ரர் வரை சென்றதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இவரைக் கொலை செய்த நபர்கள் மிகவும் கொடூரமாக இவரை கொலைசெய்து  இருக்கிறார்கள். அந்த அளவு ஆத்திரம் இருக்க காரணம் என்ன என்று தெரியவில்லை. இது பெரும் சந்தேகம்.

கொலை செய்தவரின் மனைவி: இவர் கணவரை விட்டு விலகி வாழ்ந்த பெண். ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இவர் பேஸ் புக் ஊடாக சுரேனோடு நட்பு ரீதியாக பழகி வந்ததாக சுகந்தாவுக்கு வேண்டப்பட்ட நபர் ஒருவர் பேசும் போது குறிப்பிடுகிறார். ஆனால் எதனையும் அடித்துச் சொல்ல முடியாது என்பது அவரது வாதமாக உள்ளது. அவர் குறிப்பிடும்போது. சுகந்தாவின் கணவர் கல்யாணம் முடித்த நாள் முதல் , பல தடவை ஜெயில் சென்று வந்ததாகவும். இருவருக்கும் இடையே நல்ல உறவு எப்பொழுதும் இருந்ததே இல்லை என்கிறார்.

கொலை சந்தேக நபர்: இவர் பல தடவை ஜெயில் சென்று வந்தது உண்மையே. இவை பெரும்பாலும் அடி பிடி பிரச்சனை மற்றும் கிரெடிட் கார்ட் விடையம் என்று, பலர் கூறியிருக்கிறார்கள். இவரோடு சேர்த்து மேலும் 3 பேரை பொலிசார் கைதுசெய்து வைத்திருக்கிறார்கள். அதுபோக சுமார் 5 வீடுகளையும் ஒரு உணவகத்தையும் கூட பொலிசார் பூட்டி சீல் வைத்துள்ளதாக அறியப்படுகிறது. ஏன் எனில் இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இன் நிலையில் நட்பாக பழகியதை பொறுக்க முடியாது, கணவர் சுரேனை அடித்து கொன்றதாக பெண் தரப்பு கூற. இல்லை இல்லை மனைவி கணவனை பல தடவை ஏமாற்றியுள்ளார் என்று கணவன் தரப்பில் உள்ள நபர்கள் கூறுகிறார்கள்.

இதேவேளை ஒரு உயிர் அனியாயமாக போய் விட்டது என்று ஒரு பெண் கதறுகிறார். இந்த முக்கோண வளையத்தில் எங்கே உண்மை இருக்கிறது என்பது உங்களுக்கு புரிந்துவிடும் இலகுவாக. ஆனால் இந்த 3 பேரது பெற்றோர் , மற்றும் நெருங்கிய உறவினர்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை. இதனை அவர்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad