பிறந்த குழந்தையை சமையல் அறையில் குத்திக் கொலை செய்து போட்ட தாய்.

பிரித்தானியாவின் லங்கஷியர் பகுதியில், பிறந்த குழந்தை ஒன்றை. சமையல் அறைக்கு எடுத்துச் சென்று, கத்தியால் பல தடவை குத்திக் கொலை செய்து. அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டுள்ளார் ஒரு தாய். அங்கே சென்ற நபர் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமைவாக பொலிசார் திடீரெனச் சென்று, வீட்டை சோதனை செய்த வேளை அங்கே குப்பை தொட்டியில், குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது.

பொலிசார் தகவல் கொடுத்த நபரையும், தாயாரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இன் நிலையில் தகவல் தெரிவித்த நபருக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும். தாயாரே குழந்தைகை கத்தியால் பல தடவை குத்திக் கொலை செய்துள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். பிரேதப் பரிசோதனை மற்றும் தடையவியல் நிபுணர்கள் கொடுத்த சாட்சியங்களை வைத்தே தாம் இந்த முடிவை எட்டியுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad