அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

யார் கண்ணிலும் 46 வருடங்களாக படாத ஒரு கிராமம்!

46 வருடங்களான எந்தவொரு அதிகாரிகளின் அவதானத்திற்கும் உட்படாமல் உள்ள கிராமம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அரணாநாயக்க பிரதேச செயலாளர் எல்லைக்கு சொந்தமான தெல்லெக கிராம சேவகர் எல்லையில் கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கிராமம் அம்பகொல்ல என அழைக்கப்படுகிறது.

1971ஆம் ஆண்டு கிராம விரிவாக்கத்தின் கீழ் அப்போதைய அரசாங்கத்தினால் இந்த கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது கிட்டத்தட்ட 52 வீடுகள் உள்ள அந்த கிராமத்தில் வசிப்பவர்களில் ஒருவரேனும் அரசாங்க தொழில் செய்யாதவர்கள் என கூறப்படுகின்றது.

பலர் கூலி வேலை மூலம் வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொள்கின்றனர். பெண்கள் பலர் வீட்டில் பீடி சுற்றுவதன் ஊடாக கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

உரிய வீதி கட்டமைப்பு இல்லாமையினால் சிரமத்திற்குள்ளாகியுள்ள இந்த கிராம மக்கள், தற்போது பயன்படுத்துகின்ற வீதியும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கிராமத்தின் நீர் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்தாமையினால் பல கிலோ மீற்றர் தூரம் சென்று நீர் கொண்டு வரும் அவல நிலைக்கு அங்குள்ள மக்கள் முகங்கொடுத்துள்ளனர்.