திருமணம் முடித்து 6 நாள், விபத்தில் கணவன் கொடூர பலி! மனைவிக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் திருமணம் முடித்து 6 நாட்களான இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இச் சம்பமானது இன்று காலை 11 மணியளவில் வேலணை அராலி சந்தியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் இழுத்துச் சென்று கடலில் பாய்ந்துள்ளது. இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே 28 வயதுடைய பிரபாகரன் என்பவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவியான நிறெஞ்சனா என்பவர் படுகாயமடைந்துள்ளார்.


படுகாயமைந்த குறித்த பெண் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து 6 நாட்கள் எனவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதியை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.