மருத்துவமனையில் நான் 75 நாள் இறந்த நிலையில் தான் இருந்தேன்... சாமியாரின் உருவில் ஜெ.வின் ஆத்மா..

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்துள்ளார். அப்போது அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும், அது குறித்து ஒ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என்றும் அனுமதி வேண்டி கத்திருந்துள்ளார்.

இதையறிந்த பத்திரிக்கை நிருபர்கள் அந்த சாமியாரிடம் இது குறித்து விசாரித்தபோது, கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாகவும், அந்த ஆவி பேசுவது போலவும் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது,

நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தேன். தொண்டர்கள் நடத்திய பூஜைகள், பிரார்த்தனைகளை எனது ஆன்மா சொல்லியது.ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்திய மானவர். அவருக்கு உறு துணையாக இருப்பேன்.

சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது. தீபா கனவிலும் பேச நினைத்தேன். அவரது கணவரை சந்தித்து பேசினேன். அவரிடமும் எல்லா விஷயங்களையும் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad