பிரித்தானியா ராணியை நடனம் ஆட வைத்த இந்தியர்: நெகிழ வைக்கும் நிகழ்வு

பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபெத் இந்திய கலைஞரிடம் நடனம் கற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்ற பிரித்தானியா - இந்தியா கலாசார விழாவின் போதே இந்த நிகழ்வு நடந்துள்ளது.

90 வயதான பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் பிலிப் மற்றும் பேரன் இளவரசர் வில்லியம் மற்றும் வில்லியம் மனைவி கேட் ஆகியோருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், இரு நாடுகளை சேர்ந்த கலை, உணவு, இலக்கியம், விளையாட்டு, அரசியல் என பல்வேறு துறைகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். இரு நாடுகளை சேர்ந்த கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

லண்டனில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த நடனக்கலைஞர் அருணிமா குமாரும் தனது நடனத்தை அரங்கேற்றினார். கலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு பிரித்தானியா ராணி பிரபலங்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அருணிமாகுமாரிடம் ராணி நடனம் கற்றுக்கொண்டார்.

இதுகுறித்து அருணிமா குமார் கூறுகையில், நான் ராணியை சந்தித்தேன். அப்போது அவர் என்னுடன் சேர்ந்து சில நடன அசைவுகளை கேட்டு தெரிந்து கொண்டு ஆடிப்பார்த்தார்.

மேலும், கடினமான முத்திரை களை எப்படி செய்கிறீர்கள்? தொடர்ந்து நன்றாக செய்யுங்கள் என்று வாழ்த்தினார். எனக்கு இது உற்சாகம் அளிப்பதாக இருந்தது. எனது வாழ்நாளில் இதை மறக்கவே மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad