அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

கனடாவில் 8 மில்லியன் டொலர் மோசடி: தமிழ் தம்பதியினர் கைது

கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் ( இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணைகளின் மூலம் போலியான காசோலைகளை பயன்படுத்தி இவர்கள் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், போலியான சான்றளிக்கப்பட்ட காசோலைகளை பயன்படுத்தி விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரை நாடி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.