லண்டனில் பாரிய குண்டு ஒன்று மீட்பு: போக்குவரத்து முற்றிலும் ரத்து

இரண்டாம் உலக போர் காலத்துக்கு உரியது என கருதப்படும் பாரிய குண்டு ஒன்று பிரித்தானியாவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத் (Portsmouth) துறைமுகத்தில் நீருக்கு அடியில் இருந்து இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரோயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த துறைமுகத்தை அண்மித்த பகுதியில் படகு சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், போர்ட்ஸ்மவுத் மற்றும் Southsea தொடருந்து நிலையத்திற்கு இடைப்பட்ட ரயில் சேவைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியை அண்மித்த பகுதியின் வீதிகள் சிலவும் மூடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீட்கப்பட்டுள்ள வெடிகுண்டு 226 கிலோ நிறையுடைய அதி சக்தி வாய்ந்த வெடிபொருள் என ரோயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த குண்டு ஜேர்மனியின் SC 250 என நம்பப்படுவதாகவும் பிரித்தானிய கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad