உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பதுளையில் பெண்ணை ஏமாற்றிய நைஜீரிய காரன்! இறுதியில் நடந்தது இதான்!

சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக, பதுளைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் 43 இலட்சத்து 600 ரூபாவை மோசடி செய்த நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாலம்பே தனியார் கல்வி நிறுவனமொன்றில் தொழினுட்ப பாடநெறியை பயிலும் பென்சன் டேவிட் என்ற 22 வயதுடைய நைஜீரிய பிரஜை ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் பதுளை கனுபேலேல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவருடன் பேஸ்புக்கில் நண்பராகியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண்ணிடம் இளைஞர் 43 இலட்சத்து 600 ரூபா ரூபா பணத்தை பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் குறித்த யுவதியுடனான தொடர்பை முற்றாக துண்டித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கொழும்பு மாலபே பகுதியில் வைத்து கைது செய்து பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன்போது இளைஞனை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் ரசான்ஜன ஜயசேக்கர உத்தரவிட்டார்.