உயர் அதிகாரியால் பாலியல் தொல்லை. ஒத்துழைக்காத யுவதி ரசீலா கணனி அறையில் கொலை!! Share

புனேவில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரசிலா என்ற 25 வயதுப் பெண், அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஒயரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

 ஐ.டி பெண் ஊழியர் அலுவலகத்திலே கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் இன்ஃபோஸிஸ்-ல் பணியாற்றிவந்த பாதுகாப்புக் காவலரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், ரசிலா கொலை செய்யப்பட்டதற்கு இன்போஸிஸ்-ல் பணியாற்றி வரும் மூத்த ஊழியர் தான் காரணம் என திடுக்கிடும் குற்றச்சாட்டை ரசிலாவின் தந்தை முன்வைத்துள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியான ரசிலாவின் தந்தை ராஜி அளித்த பேட்டியில், 'எனது மகளுக்கு ஒரு மூத்த ஊழியர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த ஊழியரின் தொந்தரவு குறித்து நண்பர்களிடமும் எங்களிடமும் பலமுறை ரசிலா கூறியிருக்கிறார். இதனால், பெங்களூருவுக்குப் பணிமாற்றம் செய்யக்கோரி இன்ஃபோஸிஸ் நிர்வாகத்திடம் கேட்டிருந்தார். பாதுகாப்புக்காவலர் எப்படி அலுவலக அறையில் நுழைந்தார் என்பது வியப்பாக உள்ளது' எனக் கூறியுள்ளார்.

ரசிலாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ள இன்போஸிஸ் நிர்வாகம், அவரது குடும்ப உறுப்பினருக்கு வேலை, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்





Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad