யாழ் வாள் வெட்டில் ஈடுபட்டு பிடிக்கப்பட்ட காவாலிகள் பாவித்த பயங்கர ஆயுதங்கள் (Videos).

யாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மைக்காலமாக யாழில்  இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்  ஐந்து நபர்கள்  நேற்று மாலை  யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 7 கூரிய வாள்களும், இரண்டு கைக்கோடரி ,சிறிய கத்தி ஒன்றும் , கைத்தொலைபேசி,  முகமூடி தொப்பி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில் கைது செய்யப்பட்ட  ஐந்து சந்தேகநபர்களும் 17 வயது தொடக்கம் 21  வயதிற்கு உட்பட்டவர்கள்.

இவர்கள் கல்வி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களது விசாரணைகளை தொடர்ந்து  ஏனைய குற்றவாளிகளும் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படலாம் என்றும் யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் இன்றைய தினம் யாழ் நீதவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad