காட்டையே விழுங்கும் அளவிற்கு உருவாகிய திடீர் வெடிப்பு! மக்கள் பீதியில்

சைபீரியக் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பெரும்பள்ளம், காட்டை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருவதாக ஆய்வாளர் களும், இயற்கை ஆர்வலர்களும் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். சைபீரியாவில் 300 அடி ஆழம் கொண்ட ‘பாட்டகைக்கா’ என்ற அந்தப் பள்ளம் ஆண்டுக்கு 30 முதல் 100 அடி வரை வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.


‘பாதாளத்தின் முகப்பு’ என்று குறிப்பிடப்படும் இந்தப் பள்ளம், இயற்கை ஆர்வலர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் 2 லட்சம் ஆண்டுகால சுற்றுச்சூழல் வரலாற்றைத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களின் பின்னணியை வெளிக்கொணர விஞ்ஞானிகளுக்கு இப்பள்ளம் கைகொடுக்கிறதாம். இந்தப் பள்ளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மரத்துண்டுகளின் அடிப்படையில், அது முன்பு ஓர் அடர்ந்த வனமாக இருந்தது என்பதை அறிய முடிகிறது என்கிறார்கள்,


ஆய்வாளர்கள். தற்போது அரை மைல் நீளத்துக்கு இருக்கும் இந்தப் பள்ளம், 1960–களிலேயே அப்பகுதியில் இருந்த வனப்பகுதியை சிறுக அழித்து வந்துள்ளதாக சைபீரிய மக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் இருந்து எழும் விசித்திர ஒலிகளால் உள்ளூர் மக்கள் இதை ‘நரகத்தின் வாயில்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ஆய்வுக்கும் அதிர்ச்சிக்கும் உரியதாக இப்பெரும் பள்ளம் உள்ளது.Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.