அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

தாய், தந்தை, மகன் சேர்ந்து எழுதிய பரீட்சை! கல்விக்கு வயது தடையில்லை!:

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை ஆர்வம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்து தன் மகனுடன் பிளஸ் 2 தேர்வு எழுதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெற்றோர் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வுகளில் தனது மகனுடன் தாயும், தந்தையும் தேர்வு எழுதுவதை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

நடியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி. அவரது மனைவி இல்லத்தரசி. இவர்களுக்கு பீலாப் என்ற மகன் உள்ளார். அவர் ரனாகாட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

தற்போது பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தன் மகன் பிலாப்புடன் பிளஸ் 2 படிக்கும் தாய், தந்தை ஆகியோரும் தேர்வு எழுதினர்.

குடிசை வீட்டில் வாழும் அவர்களுக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் கடந்த 2014 மற்றும் 2015ல் இடைநிலைக் கல்வியை முடித்தனர்.

இந்நிலையில், பிளஸ் 2 படிக்க விரும்பிய அவர்களை அவர்களது வயதை காரணம் காட்டி அனுமதி அளிக்க மறுத்து விட்டன.

இறுதியாக படிப்பின் மீது இருவருக்கும் உள்ள தாக்கம் காரணமாக பிலாப்பின் பள்ளித் தலைமை ஆசிரியர் இருவரையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.

கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுக்காக இருவரும் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை பிலாப் தீர்த்து வைப்பார்.

அனைத்து தடைகளையும் தகர்ந்து படிப்பின் மீதான ஆர்வத்தால் கடினமாக உழைக்கும் பிலாப்பின் பெற்றோர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.