அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

கனடாவில் போலிஸ் கர்பிணிப் பெண்ணுக்கு செய்த காரியம்!

கனடா நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பிரசவம் பார்த்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரொறொன்ரோ நகரில் வசித்து வரும் Colin McLaughlin என்ற பொலிஸ் அதிகாரி கடந்த 22 ஆண்டுகளாக காவல் துறையில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில்,

நேற்று இரவுப் பணியில் இருந்த அவர் வாகனத்தில் ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்து வந்துள்ளார். அப்போது, அதிகாலை 1.20 மணியளவில் ஒரு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், ‘வாகனத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் அப்பகுதி வழியாக வந்துக்கொண்டு இருப்பதாகவும், மருத்துவர்கள் வருவதற்கு தாமதம் ஆவதாக’ தகவல் கிடைத்துள்ளது.

 தகவல் கிடைத்த அதே நேரம் வாகனம் ஒன்று அந்த இடத்திற்கு வந்துள்ளது. பொலிஸ் அதிகாரி விரைந்துச் சென்று பின் இருக்கையை பார்த்தபோது கர்ப்பிணி பெண் பிரசவ வலியில் துடித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, குழந்தையின் தலை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. நிலைமையை உணர்ந்த பொலிஸ் அதிகாரி உதவிக்கு ஒருவரை அழைத்துக்கொண்டு காருக்குள் சென்றுள்ளார். பின்னர், குழந்தையின் தலையை பற்றிக்கொண்டு ‘வயிற்றை பிடித்து தள்ளுங்கள்’ என கர்ப்பிணி பெண்ணிடம் கூறியுள்ளார். பொலிஸ் அதிகாரி கூறியதை போல பெண்ணும் தனது வயிற்றை பலம் கொண்டு தள்ளியுள்ளார்.

சில வினாடிகள் போராட்டத்திற்கு பிறகு குழந்தை பிறந்ததும் பொலிஸ் அதிகாரி தனது கைகளில் ஏந்திக்கொண்டார். சில நிமிடங்களில் மருத்துவர்கள் அங்கு வந்ததும் குழந்தை பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டது. சரியான நேரத்தில் உதவிய பொலிஸ் அதிகாரிக்கு தாயாரும் மருத்துவர்களும் நன்றியை தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸ் அதிகாரி பேசியபோது, ‘இதுபோன்ற ஒரு நிகழ்வு என் வாழ்நாளில் நடக்கவில்லை. மிகவும் நெகிழ்ச்சிகரமான ஒரு சம்பவம்’ என உணர்ச்சிகரமாக கருத்து தெரிவித்துள்ளார்.