மது அருந்த தண்ணீர் இல்லாததால் தந்தையை கொன்ற மகன்

தண்ணீர் தொட்டியில் நீர் பிடிக்காத தந்தை மீது ஆத்திரம் கொண்ட மகன் கோபமுற்று கொலை செய்த சம்பவம் டெல்லி வாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்த தண்ணீர் இல்லாததால் கோபம்: தந்தையை கொன்ற மகன் கைது புதுடெல்லி: டெல்லியின் பிந்தாபூர் பகுதியில் இ-ரிக்ஷா ஒட்டுநராக பணியாற்றி வந்த 40 வயதான சேட்டன்,

75 வயதான தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையை நேரில் பார்த்ததாக சேட்டனின் மகள் தெரிவித்துள்ளார். மது அருந்த தன் மகளிடம் தண்ணீர் கேட்ட சேட்டன், வீட்டில் தண்ணீர் இல்லாததை கேட்டு ஆத்திரமடைந்துள்ளார். மது அருந்த தண்ணீர் இல்லாத கோபத்தால் அருகில் இருந்த கட்டையை கொண்டு தனது தந்தையை தாக்கியுள்ளார்.

மகன் தாக்கியதில் மயக்கமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே மரணித்துவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து சேட்டனை போலீசார் கைது செய்துள்ளனர். சேட்டன் வசிக்கும் பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வராத நிலையில், உடல்நல குறைவு காரணமாக ராம்குமார் தண்ணீர் பிடிக்காமல் இருந்துள்ளார்.

40 வயதான சேட்டன் மது அருந்திய நிலையில் வயதான தந்தையை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டு மரணித்த ராம்குமார் எம்டிஎன்எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். மகன் கட்டாயத்தில் ராம்குமார் வீட்டு வேலைகளை கவனித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.