சிரிய போரில் கொத்து கொத்தாக சாகும் சிறுவர்கள்

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாரில் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 652 சிறார்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 255 பேர் பள்ளிகள் அருகே உயிரிழந்து உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 20 சதவிதம் அதிகரித்து உள்ளது என ஐ.நா. தெரிவித்து உள்ளது.

முறையாக அதிகாரப்பூர்வமாக பெற்ற தகவல்களில்தான் 652 சிறார்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறையான ஆய்வறிக்கையின் மூலம் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிரியாவில் போரில் ஈடுபட 2016-ம் ஆண்டு மட்டும் 850 சிறார்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கலாம் என ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பு நம்புகிறது. இது கடந்த 2015-ம் ஆண்டை விட இருமடங்கு அதிகரித்து உள்ளது. சிறுவர்கள் தற்கொலை தாக்குதல், சிறை காவல் என கொடூரமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சிறார்களின் உயிரிழப்பானது முன்னெப்போதும் இல்லாதது என சிரியாவில் இருந்து பேசிய கீர்த் காப்பெலாரி (மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் ஐ.நா. சபையின் குழந்தைகள் பாதுகாப்பு மைய தலைவர்) கூறிஉள்ளார். தினமும் சிரியாவில் மில்லியன் கணக்கான சிறார்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்களின் வாழ்வானது தலைகீழாக மாறி உள்ளது.

சிரியாவில் போர் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள சுமார் 6 மில்லியன் குழந்தைகள் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உதவி பெற்று வருகிறார்கள், இதுவும் இதுவரையில் காணப்படாத ஒன்று. இவர்களில் சுமார் 2.3 மில்லியன் குழந்தைகள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர், பாதிக்கப்பட கூடிய வகையில் பிற சிறார்கள் மிகவும் மோசமான மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் சிக்கியிருந்தனர். உடல்நிலையில் மிகவும் மோசமான பாதிப்புடன் ஒவ்வொரு சிறார்களும் உயிருக்காக மிகவும் அச்சத்தில் உள்ளனர் என ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தொண்டு நிறுவனம் கடந்த வாரம் சிரியாவில் சிறார்கள் மிகவும் கொடூரமான முறையில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என எச்சரிக்கை விடுத்தது.

உடனடியான உதவியின்றி பாதிப்பு அதிகரிக்க கூடும் எனவும் தொண்டு நிறுவனம் அச்சம் தெரிவித்து உள்ளது. மூன்றில் இரண்டு சதவித குழந்தைகள் அவர்கள் விரும்பிய உறவினரை இழந்து இருக்க கூடும், அவர்களுடைய வீடு மற்றும் உடமைகள் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என ஐ.நா. தெரிவித்து உள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கிய 2011-ம் ஆண்டு சாஜாவிற்கு வயது 7. இப்போது அவருக்கு வயது 13, அவருடைய பாதி வாழ்நாட்களில் அவருக்கு தெரிந்தது எல்லாம் போர் மட்டும்தான்.

போர் காரணமாக 5 முறை இடம்பெயர்ந்து உள்ளார். சண்டை தொடங்கி மூன்று ஆண்டுகள் கழித்த பின்னர் சாஜா தன்னுடைய சகோதரனை இழந்தாள், அலிப்போ குண்டு வெடிப்பில் தன்னுடைய நான்கு நண்பர்களையும் இழந்தார். போரில் ஒரு காலை இழப்பதற்கு முன்னதாக அவருக்கு ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக வேண்டும் என ஆர்வம் அதிகமாக இருந்து உள்ளது. இப்போது ஒரு காலுடன் வசித்து வருகிறார், இந்த நிலையிலும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற கனவுடன் உயிர் வாழ்ந்து வருகிறார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad