ட்ரம்பின் மகளின் லீலைகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதே!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக்கிய கொள்கையை அவரது மகள் இவாங்கா ட்ரம்ப் மீறியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களையே அமெரிக்கர்கள் வாங்க வேண்டும் என ட்ரம்ப் முழ்க்கமிட்டார்.

தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது மகள் இவாங்கா ட்ரம்ப், தனது பேஷன் நிறுவனத்திற்க்காக சீனாவில் இருந்து சுமார் எட்டு கன்டைனர்களில் இறக்குமதி செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ட்ரம்ப் குடும்பத்தினர் தங்களது தொழில் தேவைக்காக பல பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொள்கை கோட்பாடு எல்லாம் மக்களுக்கு மட்டும்தான் குடும்பத்தினருக்கு கிடையாது என்கிற மரபின் படி ட்ரம்பின் மகள் செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.