வீட்டிற்குள் கடத்திவைத்து கற்பழித்தார்கள்! கடைசியாக நிர்வாணமாக இந்தப் பெண் ஓடிய கொடுமை

தெற்கு டெல்லியில் உள்ள சாலையில் இளம்பெண் ஒருவர் அழுதுகொண்டே நிர்வாணமாக ஓடி வந்து கொண்டு இருந்தார்.ஆனால் அந்த வழியாக வந்த யாரும் அந்த பெண்ணிற்கு உதவி செய்ய முன் வரவில்லை.மாறாக நிர்வாணமாக ஓடி வந்த அந்த பெண்ணை வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தனர்.


இந்நிலையில் அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்,அந்த பெண்ணிற்கு உதவி செய்தார். ஆட்டோ டிரைவர் உதவியுடன் காவல் நிலையத்திற்கு சென்ற அந்த பெண்,தன்னை ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களின் வீட்டில் அடைத்து வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்து வந்ததாகவும்,பால்கனியிலிருந்து குதித்து அந்த கும்பலிடமிருந்து தப்பித்ததாகவும் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி புறநகர் பகுதியில் உள்ள கால் சென்டரில் பணிபுரியும் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவரான விகாஸ் என்பவனுக்கும் அந்த பெண்ணிற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை தன்னுடைய நண்பனின் வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு வருமாறு விகாஸ் அழைத்துள்ளான்.இதனைத் தொடர்ந்து இருவரும் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.அதன் பின்னர் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அந்த பெண்ணை விகாஸ் அழைத்துள்ளான்.அதனை நம்பி அந்த பெண் விகாசின் வீட்டிற்கு சென்ற போது,

அங்கு ஏற்கனவே விகாசின் நண்பர்கள் நான்கு பேர் இருந்துள்ளனர். பின்னர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை மது அருந்தச் செய்த அவர்கள், மாறி, மாறி கற்பழித்து வந்துள்ளனர்.பின்னர் விகாஸ் வேறு ஒரு வேலையாக வெளியே சென்றிருந்த சர்ந்தர்ப்பதை பயன்படுத்தி, பால்கனியிலிருந்து குதித்து அந்த பெண் தப்பித்துள்ளார்.இதில் அந்த பெண்ணிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் தெர்கு டெல்லியில் முனிர்கா பகுதியில் வசித்து வருகிறார்.அந்த பெண் மருத்துவ சிகிச்சைக்காக லால்பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விகாஸ் குமார், லக்‌ஷய் பல்லா, நவீன், சுவரித், மற்றும் பரதீக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad