விண்வெளியில் வெடிக்கப்போகும் போர்..! கொடிய ஆயுத உற்பத்தியில் சீனா..! கொந்தளிக்குமா அமெரிக்கா..?

எதிர்காலத்தில் செட்லைட் மூலமாக விண்வெளியில் யுத்தம் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தலை சீனா தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், எதிரி நாடுகளின் செய்மதிகளை தாக்க அழிக்க கூடிய வகையில் லேசர் மற்றும் மின்காந்த ஆயுதங்களையும், அதி சக்திவாய்ந்த மைக்ரோவேவ் ஆயுதங்களையும் சீனா உற்பத்தி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய இராணுவ விவகாரங்கள் தொடர்பான நிபுணர் ரிச்சர்ட் பிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பாடல், பிரதேசங்களை அடையாளம் காண உதவும் செய்மதிகளின் துல்லியமான தாக்குதலை முறியடிக்கும் நோக்கில் இவ்வாறான ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகின்றது.
சீனாவின் இந்த நடவடிக்கை விண்வெளி ரீதியிலான இராணுவமயமாக்களை துரிதப்படுத்தும் என ரிச்சர்ட் பிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விண்வெளி வீரர்களின் உயிரை சீனா பணயம் வைக்கின்றது. இந்த ஆயுத முன்னேற்றங்களை கொண்டு அமெரிக்க செய்மதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளகூடும்.
இதேவேளை, லேசர் முறையிலான ஆயுதங்களை அமெரிக்கா ஏற்கனவே அபிவிருத்தி செய்துள்ளது. இந்நிலையில், சீனாவின் லேசர் ஆயுத விருத்தி தொடர்பில் அமெரிக்க விரைந்து செயற்பட வேண்டும் என ரிச்சர்ட் பிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad