அமெரிக்காவில் பயங்கர விபத்து:தரையில் மோதி வெடித்து சிதறிய விமானம்!

அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜியார்ஜியா மாகாணத்திலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காப் பிராந்திய சர்வதேச விமான நிலையத்திலிருந்து அட்லாண்டாவில் உள்ள புல்டன் விமானநிலையத்திற்கு சிறிய ரக செஸ்னா சைட்டேஷன் என்ற விமானம் புறப்பட்டுள்ளது.

புறப்பட்டு மூன்று மைல் பயணித்த விமானம் திடீரென செயலிழந்து ஒரு வீட்டின் மீது மோதி வெடித்து சிதறிய தீப்பற்றி எறிந்துள்ளது.

இதில், விமான்ததை இயக்கிய விமானி உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர்தப்பியுள்ளனர். விபத்தை தொடர்ந்து அவசர உதவி குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சாலை முடப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த விமானியை குறித்த தகவல்களும், விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad