தந்தையின் கண் முன்பாக இரண்டு மகள்களை கற்பழித்த ஐந்து கொடூரர்கள் இவர்கள்தான்!

அதிசொகுசு வாகனம் ஒன்றில் வைத்து இரண்டு சிறுமிகளை அவர்களது தந்தையின் கண் முன்னால் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தரும் சம்பவம் குஜராத்தின் தாஹோட் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய பதினொரு பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்பக்லா என்ற கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனது கடையை மூடிவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் வீடு திரும்ப முயற்சித்தார். அப்போது திடீரென அதிசொகுசு வாகனம் ஒன்றில் வந்த சிலர், குடும்பஸ்தரையும் அவரது இரண்டு மகள்களையும் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

அவர்களுக்குக் காவலாக மேலும் ஆறு பேர் மோட்டார் சைக்கிள்களில் அந்த வாகனத்தைப் பின் தொடர்ந்தனர். வாகனத்தில் வைத்தே ஐந்து பேரும் மாறி மாறி இரண்டு பெண் பிள்ளைகளையும் அவர்களது தந்தையின் கண் முன்பாகவே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கினர். தனது குழந்தைகளை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும் கருணை காட்டாத ஐந்து பேரும், நீண்ட தொலைவில் சென்று மூவரையும் இறக்கிவிட்டனர். இது பற்றி பொலிஸில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டிச் சென்றனர். எனினும், அங்கிருந்து நேரே பொலிஸ் நிலையம் சென்ற மூவரும் அங்கு, சம்பந்தப்பட்ட பதினொரு பேர் மீதும் புகார் பதிவுசெய்தனர்.

சிறுமிகள் இருவரையும் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த பொலிஸார், தந்தையையும் ஏற்றிக்கொண்டு சென்று சந்தேக நபர்களில் பிரதான ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களை விசாரித்ததில், குடும்பஸ்தரின் மகன் சாராயக் கடத்தல் ஒன்றின் பேரில் பொலிஸில் சிக்கியதாகவும், விசாரணையில் தமது மதுபானச் சாலையிலேயே அவற்றைக் கொள்முதல் செய்ததாகவும் கூறி தம்மை பொலிஸில் காட்டிக் கொடுத்துவிட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் விதமாகவே அவரது சகோதரிகள் இருவரையும் பலாத்காரம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பதின்மூன்று பேர் மீதும் பொலிஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad