வெட்டவெளியில் சோதனைக்காக மாணவிகளின் உடையை களைத்த வார்டன்!!

கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் பள்ளியில் சோதனை செய்ய வேண்டுமென 70 மாணவிகளின் உடையை களைத்த வாடனின் மேல் பெற்றோர் மற்றும் மாணவிகள் கோபத்தில் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளியின் கழிவறையில் இரத்த கறை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அது எவ்வாறு வந்தது என கண்டுபிடிக்க மாணவிகள் ஆடையை களையுமாறு வற்புறுத்தி உள்ளார். அவ்வாறு செய்யாவிடில் அடித்து துன்புறுத்த படுவீர் என மிரட்டி உள்ளார். இதனால் வேறு வழியின்றி மாணவிகள் அவ்வாறு செய்துள்ளனர். இச்சம்பவம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. பள்ளி வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனால், இவை அனைத்தையும் அந்த வார்டன் மறுத்துள்ளார். படிப்பு விஷயத்தில் நான் கண்டிப்பாக இருப்பேன். எனவே மாணவிகளுக்கு என்னை பிடிக்காது. என்னை பிடிக்காத சிலரின் தூண்டுதலின் பெயரில் இவ்வாறு செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad