யாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்!!

நச்சுதிரவம் அருந்திய நிலையில் குற்றுயிராய் காணப்பட்ட காதல் ஜோடி மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று(29) மதியம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இளம் ஜோடிகளே இவ்வாறு தற்கொலை செய்வதற்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த இவர்கள் நேற்று காலை யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர். நீண்ட நேரமாக கோட்டை பகுதியில் கதைத்துக்கொண்டிருந்த இருவரும் திடீரென மயங்கிய நிலையில் வீழ்ந்து காணப்பட்டுள்ளதாக இவர்களை அவதானித்தவர்கள் கூறியுள்ளனர்.

அருகில் சென்று பார்த்த போது ஒரு வகை நச்சுதிராவகம் அருந்தியமை தெரியவந்துள்ளது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் தற்கொலை செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக இருவரின் பெற்றோருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

close