உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மனைவியையும் இரு குழந்தைகளையும் சுட்டு கொன்று.. தற்கொலை செய்த கணவர்..!!

மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

மாகாணத்தின் ஸ்காட்ஸ்டேல் நகரை சேர்ந்தவர் ஜேசன் பேர்பேங்க்ஸ் (39) இவர் மனைவி அன்னி (39) இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டிலிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை ஜேசன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

பின்னர் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். ஜேசன் வேலைக்கு வராமல் இருந்ததால் அது குறித்து அறிய அவரின் நண்பர், ஜேசன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு ஜேசன் உட்பட குடும்பத்தார் நான்கு பேரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து பொலிசார் சார்பில் பேசிய பென் ஹோஸ்டர் என்ற நபர், தொழில் மற்றும் பணப்பிரச்சனையால் ஜேசன் மற்றும் அன்னி தம்பதியினர் தவித்து வந்த நிலையில் தான் இச்சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜேசன் சகோதரி லாரா கூறுகையில், குடும்பத்தை ஜேசன் மிகவும் நேசித்தார், அவர் தவறான மனிதர் கிடையாது.

தனது பிரச்சனைக்கு உதவியை அவர் கோரியிருக்கலாம் என தான் நினைப்பதாக கூறியுள்ளார்.