உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பேய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நூதன விழா! – எங்கு தெரியுமா..?

கேரளாவில் பேய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நூதன விழா கோலாகலமாக நடைபெற்றது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் திருமணம் ஆகாமலே இறந்து போகும் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆவிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் விழா நடைபெறுகிறது. திருமணமான புதிதில் இறந்தவர்களுக்கும் இந்த பேய்க் கல்யாணம் நடத்தப்படுகிறது.

இறந்தவர்களின் நினைவாக மணமகன் மற்றும் மணமகள் போல பொம்மையை அலங்கரித்து வைத்து ஜாம்ஜாம் என்று கல்யாணம் நடக்கிறது.

இந்த திருமணத்திற்கும் இறந்த ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகப் பொருத்தத்தைப் பார்த்துத்தான் கல்யாணம் செய்து வைக்கிறார்களாம்

இப்படிச் செய்வதால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்று அந்த கிராம மக்கள் நம்புகிறார்கள்