படுத்ததும் ஆழ்ந்த உறக்கத்தை பெற வேண்டுமா? இதோ அற்புதமான சில டிப்ஸ்!

மன அழுத்தமிக்க இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமானோர் சரியான தூக்கம் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கின்றனர். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமானது. அந்த தூக்கம் சரியாக கிடைக்காவிட்டால், அதுவே உடலில் பல நோய்களை வரவழைக்கும். தூக்கத்தின் மூலம் தான் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.

சரியான ஓய்வு கிடைக்காமல் உடல் இயங்கிக் கொண்டிருந்தால், உடலுறுப்புக்கள் விரைவில் பாதிக்கப்படும். ஆகவே எப்படி உண்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதேப் போல் தூக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொள்ளக்கூடாது.

இக்கட்டுரையில் 30 நொடிகளிலேயே ஆழ்ந்த உறக்கத்தைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து, மனதில் கொண்டு பின்பற்றி நடந்தால், இரவு நேரத்தில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

புத்தகம் படி
இரவில் படுக்கையில் படுத்ததும் தூங்க வேண்டுமானால், படுக்கும் முன் சிறிது நேரம் புத்தகத்தைப் படியுங்கள். அதுவும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகத்தைப் படிக்காமல், போர் அடிக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இதனால் படுத்த உடனேயே தூங்கிவிடலாம்.

ஒரே நேரத்தில் உறங்குங்கள்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்காமல், தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் இரவு நேரத்தில் தினமும் தூங்கும் நேரம் வந்ததுமே தானாக தூங்கிவிடுவீர்கள். ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதால், மூளை செரடோனின் மற்றும் மெலடோனின் அளவை சரிசெய்து, தானாக தூக்கத்தைப் பெறச் செய்யும்.

ஆரோக்கியமான டயட்
ஆம், ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வதன் மூலம் படுத்ததும் தூக்கத்தைப் பெற முடியும். மேலும் ஆய்வுகளில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் வான் கோழி சாப்பிட்டால், அதில் உள்ள அதிகளவிலான ட்ரிப்டோஃபேன் ஒருவித மயக்க உணர்வை உண்டாக்கி, நம்மை விரைவில் தூங்க வைக்கும்.

யோகா
தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டால், தூங்கும் முன் சிறிது நேரம் யோகா செய்யுங்கள். இதனால் உடலினுன் அனைத்து பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக செல்வதோடு, உடல் ரிலாக்ஸ் ஆகி, விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

தியானம்
எளிதில் தூக்கத்தைப் பெற தியானம் மேற்கொள்வதும் ஓர் அற்புத வழியாகும். இரவில் படுக்கும் முன் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம், மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் அழுத்தங்கள் நீங்கி, சுவாசம் சீராகி சீக்கிரம் தூக்கத்தைப் பெறச் செய்யும்.

வெதுவெதுப்பான பால்
இரவில் நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், ஒரு டம்ளர் பால் குடிக்க சொல்வார்கள். இதை பலரும் பொய் என்று நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அது தான் இல்லை. இரவில் வெதுவெதுப்பான பாலைக் குடிக்கும் போது, அது ட்ரிப்டோபேன் அளவை சீராக்கி சீக்கிரம் தூக்கத்தை வரவழைக்கும்.

எலக்ட்ரானிக் பொருட்கள்
எலக்ட்ரானிக் பொருட்களை அறையில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம். இதிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் மூளையை ரிலாக்ஸ் அடையச் செய்யாமல் செய்து, தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே படுத்ததும் தூங்க நினைத்தால், அருகில் மொபைல், லேப்டாப் போன்றவற்றை 1 மணிநேரத்திற்கு முன்பாகவே பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.

கருப்பு நிற திரைச்சீலைகள்
படுக்கை அறையில் உள்ள ஜன்னல்களின் வழியே வெளிச்சம் வந்தால், அங்கு கருப்பு நிற திரைச்சீலைகளை வாங்கி தொங்கவிடுங்கள். இதனால் அந்த அறை முழுவதும் இருட்டாக இருப்பதுடன், படுத்ததுமே துங்கிவிடலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad