மாணவியிடம் மிக மோசமாக நடந்த தமிழ் பேராசிரியர் !

பிரித்தானியாவில் போதை தலைக்கேறிய நிலையில் இளம்பெண்ணிடம் மிக மோசமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது கடந்தாண்டு நவம்பரில் நடந்துள்ளது. கெரி தனபாலன் (49) என்பவர் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வேல்ஸின் Treforestல் உள்ள இரயில் நிலையம் நோக்கி மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரை மது போதையில் தனபாலன் பின் தொடர்ந்திருக்கிறார். அந்த மாணவி தனபாலனிடம் பயிலவில்லை மற்றும் அவர் பணியாற்றிய பல்கலைக்கழத்திலும் படிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பின்னர் மாணவி உடலின் மீது மோசமாக கை வைத்த தனபாலன் தொடர்ந்து அவருக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.

இந்த செயலை நிறுத்துமாறு இளம்பெண்ணான அந்த மாணவி கெஞ்சி கேட்டும் தனபாலன் நிறுத்தவில்லை. மேலும், நீ என் இதயத்தை உடைக்கிறாய் என மோசமாக பேசி தொட்டிருக்கிறார்.

இதனால் பயந்து போன மாணவி அங்கிருந்து ஓட தொடங்கிய போது விடாமல் துரத்திய தனபாலன், நான் உன்னை பின் தொடரவில்லை, நான் உன்னுடன் வீட்டுக்கு வருகிறேன், நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என கூறினார்.

ஒருகட்டத்தில் அந்த மாணவி தனது நண்பருக்கு போன் செய்து வர சொன்னார். பின்னர் மீண்டும் அவர் ஓட முயன்ற போது தடுத்த தனபாலன், ஒரு முத்தம் கொடுத்துவிட்டு நீ இங்கிருந்து செல் என கூறியிருக்கிறார்.

அந்த சமயத்தில் மாணவியின் நண்பர் அங்கு வந்துவிட தனபாலன் அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் தனபாலனின் டி என் ஏவை வைத்து விசாரித்ததில் அவர் மாணவி கன்னத்தில் முத்தம் கொடுத்தது உறுதியானது.

இதை தொடர்ந்து தனபாலனை பொலிசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் விடுத்திருந்த அறிக்கையில், நான் வசிக்கும் இடத்தை அவர் தெரிந்து கொள்ள விரும்பாததால் நான் நேராக வீட்டிற்கு நடக்க விரும்பவில்லை. தனபாலன் என் வீட்டிற்குள் நுழைந்து என்னை வன்கொடுமை செய்வார் என்று நான் பயந்தேன்.

நான் தனியாக இருந்ததால் என் உயிருக்கு அஞ்சினேன். நான் பாதுகாப்பாக உணரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிபதி டிரேசி லயார்ட் கிளார்க், தனபாலனுக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.

பெண் பாதிக்கப்பட்ட தகவல் வெளியானதும் தனபாலன் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என தெரியவந்துள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad