120 வயதுவரை ஆயுளை அதிகரிக்கும் மருந்து !

120 வயதுவரை ஆயுளை அதிகரிக்கக்கூடிய வகையிலான மருந்து ஒன்றை இஸ்ரேல் கண்டுபிடித்து உலக மருத்துவத்துறையை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

எலிகளைக் கொண்டு ஆய்வுக்கூடத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்திருப்பதாகவும், இதற்கமைய எலிகளின் ஆயுட்காலத்தை 23 சதவீதத்தினால் அதிகரிக்க முடிந்ததாகவும் இஸ்ரேல் தெரிவிக்கின்றது.

SIRT6 என்ற புரோடீன் அதிகரிக்கின்ற இந்த ஔடதம் சுகதேகியாகவும், ஆயுளை அதிகரிக்கும் சக்தியையும் சரீரத்திற்கு அளிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் பார்-இலான் பர்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஹயிம் கொஹேன்(Haim Cohen), மனிதர்களிடத்திலும் இந்தப் பரிசோதனையை நடத்திப்பார்க்கலாம் என இஸ்ரேல் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.


Tags

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.