காதலி வீட்டில் கணவன்:மீட்டுத்தருமாறு மனைவி கோரிக்கை!

பயணக்கட்டுப்பாடு நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் அவரது காதலி வீட்டில் தங்கியிருக்கின்ற நிலையில் தனது கணவனை மீட்டுத்தருமாறு மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணொருவர், கடந்த 2010-ம் ஆண்டு வவுனியாவை சேர்ந்த நபரொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்த நிலையில் பெண்ணின் கணவர், அரபு நாடொன்றிற்கு வேலைக்கு சென்றிருந்தார்.

அந்த காலகட்டத்தில் குறித்த நபருக்கும் அவரின் பள்ளிப்பருவ காதலிக்குமிடையில் முகநூல் ஊடாக மீண்டும் காதல் மலர்ந்துள்ளது. இந் நிலையில், அவர் உழைக்கும் பணம் அனைத்தையும் தனது முன்னாள் காதலிக்கு அனுப்பியுள்ளார். அதன் தொடர்ச்சியாக அண்மையில் வவுனியா வந்த குறித்த நபர் மனைவி வீட்டுக்கு செல்லாமல், அவரின் தாய் வீட்டுக்கும், காதலி வீட்டுக்கும் சென்றுவந்த நிலையில் தற்போது காதலி வீட்டிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தனது பிள்ளை தந்தையை கேட்டு அழுவதாக கூறும் மனைவி, தன் கணவனை மீட்டுத்தருமாறு போலீசார் மற்றும் பொது அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad