டெங்கு காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியம் !

காய்ச்சல் என்று வந்துவிட்டாலே அது டெங்குவாக இருக்குமோ என்று பயப்படுகிற அளவுக்கு டெங்கு காய்ச்சல் பரவல் விகிதம் என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மிகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் இதைவிட கொடுமையான நோய்களுக்கெல்லாம் கூட நம் வீட்டிலுள்ள பொருள்களையே நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்காங்க. அப்படித்தான் டெங்குவுக்கும் உங்க வீட்டு கிச்சன்லயே மருந்துகள் இருக்கின்றன. அதனால் பயப்படாதீங்க... டெங்குவை விரட்டியடிச்சிடலாம்.

பப்பாசிச் சாறு

தேவையான பொருட்கள்

பப்பாசி இலை

பப்பாசி இலைகளை அம்மி அல்லது உரல் மூலம் நன்கு அரைத்து பின்னர் அதனை நன்றாக பிளிந்து வருகின்ற சாற்றினை குடித்தால் டெங்கு காய்ச்சல் ஒரு வாரத்தில் ஓடி விடும்.

வெந்தய டீ

தேவையான பொருட்கள்

1-2 டீஸ்பூன் வெந்தயம், 1 கப் சூடான நீர் மற்றும் தேன்.

செய்முறை

1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து அதில் அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை வரை சூடாக உட்கொள்ளுங்கள். வெந்தயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பல தாதுக்கள் இருப்பதால், இது டெங்கு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும், வெந்தயம் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.


மஞ்சள் கலந்த பால்

தேவையான பொருட்கள்

1 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் தேன், 1 டம்ளர் பால்.

செய்முறை

ஒரு டம்ளர் பாலை கொதிக்கவைத்து அதில் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் தேன் சேர்க்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதை சூடாகப் பருகுங்கள். மஞ்சள்தூள் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் இந்த மஞ்சள் பயன்படுத்தலாம். மஞ்சளில் உள்ள ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் எந்த நோயும் வருவதற்கு முன்பாகவே உங்களைக் கவசம் போல காப்பாற்றும் ஆற்றல் கொண்டது. அதனால் மஞ்சள் உங்கள் உணவில் நிறைய சேர்த்தால், டெங்கு தான் உங்களை நெருங்க பயப்படுமே தவிர நீங்கள் பயப்பட வேண்டாம்.

துளசி இலை மற்றும் கறுப்பு மிளகு

தேவையான பொருட்கள்

10-12 துளசி இலை, ஒரு சிட்டிகை மிளகுத்தூள், 1 டம்ளர் தண்ணீர் மற்றும் தேன்.

செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் துளசி இலைகளை சேர்க்கவும். 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவைத்து பின்னர் அதில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்க்கவும் இன்னும் 2 நிமிடம் கொதித்த பிறகு வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இது குளிர்ந்த உடன் அதில் தேன் சேர்க்கவும். தினமும் இரண்டு முதல் மூன்று முறை சூடாக உட்கொள்ளுங்கள்.

துளசியில் சில அற்புதமான மருத்துவ பண்புகள் உள்ளன. அவை பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு உடலை பிற தீவிர சேதத்திலிருந்து பாதுகாக்கும். இதிலுள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்பு, உங்கள் உடலில் இருந்து டெங்கு வைரஸை அகற்ற உதவுகிறது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad