யாழ்: வைத்தியசாலை பற்றைக்குள் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம். இளைஞன் கைது.

யாழ்ப்பாணத்தில்சிறுமி துஷ்பிரயோகம், இளைஞன் கைது!

யாழ் பருத்தித்துறை பகுதியில் 15 வயதான சிறுமி துஷ்பிரயோகம். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 21 வயதான இளைஞன் கைது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது

பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். குறித்த நபரை பராமரிப்பதற்காக அவரது பேத்தி வைத்தியசாலையில் தங்கி நின்று பராமரித்துள்ளார்.

வைத்தியசாலையில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த வல்வெட்டித்துறை இளைஞன் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். பராமரிப்பதற்காக தங்கிநின்ற சிறுமியோடு அறிமுகமாகிய காவலாளி சிறுமியிடம் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இரவு தொலைபேசியில் அழைத்து வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள பற்றைப் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இரவு 10 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து சென்ற சிறுமி இரவு ஒரு மணியளவில் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.