மின்சார சபைக்குள் மாபியா. மின் கட்டணம் அதிகரிக்குமா?

மின்சார சபைக்குள் நிலவும் மாபியாவால் எதிர்வரும் நாட்களில் மின் கட்டணம்
அதிகரிக்கப்படும் அபாயம் நிலவுவதாக இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் காலியில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மாலக்க விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாத சங்கத்தினர் உள்ளிட்ட தரப்பினரை மின்சார சபை மாபியா என அழைக்கலாம் என குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபை சட்டமூலத்தின் 30 ஆவது சரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சிநிரலை இந்த அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மாலக்க விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Tags

Top Post Ad

Below Post Ad