சின்ன பொடியனுடன் ஓடிப்போன அன்ரி. தேடிப்பிடித்து வெட்டிய கணவன்.

நெல்லை அருகே கள்ளக்காதலை கைவிடாத இளம்பெண்ணை கொன்ற சம்பவம் குறித்து கணவர் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை அருகே உள்ள அத்திமேடு கிராமத்தை சேர்ந்தவர் சேர்மத்துரை. இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்ற கவிதா(27). இவருக்கும், டவுன் கண்டியப்பேரியை சேர்ந்த ராமச்சந்திரன் (18) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து கைவிடுமாறு கண்டித்தும், அவர்கள் 2 பேரும் கேட்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு கவிதாவும், ராமச்சந்திரனும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர்.

இந்நிலையில், நேற்று காலை டவுன் குற்றலாம் சாலை அருகே கவிதாவும், ராமச்சந்திரனும் நடந்து வந்தபோது கவிதாவின் கணவர் சேர்மத்துரை
மற்றும் கவிதாவின் சகோதரர்கள் சுப்பிரமணியன், மாரிச்செல்வம் ஆகியோர் வழிமறித்து தகராறு செய்து இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கவிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேர்மத்துரை மற்றும் கவிதாவின் தந்தை இசக்கி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சுப்பிரமணி மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.