பட வாய்ப்பு இன்றி விபச்சாரத்தில் சிக்கி கொண்ட நடிகைகள் !

கொரோனாவால் அதிகரித்து வருதால் பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்த நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த சம்பவம் கடும் பரபரப்பிரனை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதையடுத்து போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

இதில் அங்கு இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிவந்தது.

முதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மராட்டிய விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 2 நடிகைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நடிகைகள் கொரோனாவால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி விபசார கும்பல் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

அதே நேரத்தில் நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக 2 பெண்கள் மற்றும் விபசார தரகரான விஷால் என்ற சுனில்குமார் உத்தம்சந்த் ஜெயின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பட வாய்ப்பு இல்லாமல் நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுப்படுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad