கிளிநொச்சியில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் மரணம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் என இருவரே உயிரிழந்துள்ளனர்.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த பெண் கண்ணகிபுரம், புன்னை நீராவி என்ற முகவரியைச் சேர்ந்த 67 வயதுடைய நல்லதம்பி சிவபாக்கியம் என்றும் அவருடைய அயல் வீட்டில் வசிக்கும் ஒருவர் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர் D5, பெரிய பரந்தன் என்ற முகவரியைச் சேர்ந்த 46 வயதுடைய K.சிறீகாந்தன் என்றும் தெரியவந்துள்ளது.Tags

Top Post Ad

Below Post Ad