தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞன்.

திருகோணமலை – மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த சஜித் பிரியந்த திசாநாயக்க (21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ – கிபுல்பொக்க குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். ரூமி சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

உயிரிழந்த இளைஞரின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்ததாகவும், வழமை போன்று குளத்திற்கு குளிக்க சென்று வீடு திரும்பவில்லை என குளத்துக்கு சென்று தேடிய போது குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

சடலத்தை பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.