யாழில் பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு.

யாழ்.மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு வெளிநாட்டவர்களை அழைத்து சென்ற பேருந்து விவசாயி ஒருவர் மீது மேதியுள்ளது. சம்பவத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துகளுக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்துகளில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முறப்பட்டனர்.

மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் எறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தையடுத்து விபத்துக்குள்ளான பேருந்து தவிர்ந்த ஏனைய 4 பேருந்துகளும் அங்கிருந்து அனுப்பப்பட்டன.

இதனையடுத்து சம்பவ இடத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.