13 வயது சிறுமியை துஷ்பிர யோகம் செய்த 6 பேர் கைது.

 

13 வயது காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 32 வயது காதலன் உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நாவலப்பிட்டி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாவலபிட்டி, ஹரங்கல, இலுக்தென்ன, வட்டதார பகுதிகளை சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிக்கு இப்போது 13 வயது மற்றும் 10 மாதங்கள் ஆகியுள்ளது. 6 வயது முதல் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிசாரை மேற்கோளிட்டு சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

13 வயது சிறுமியை, உறவினரான 32 வயதான திருமணமான ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். ஹரங்கலவிலுள்ள கற்குகை ஒன்றில் சிறுமியை தடுத்து வைத்து பல நாள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த சமயத்தில் வேறு சிலராலும் அங்கு வைத்து துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக சிறுமி வாக்குமூலமளித்துள்ளார்.

சிறுமி காணாமல் போனது குறித்து தாயார், நாவலப்பிட்டி பொலிசில் முறையிட்டார்.

இதையடுத்து, உறவினர்களால் சிறுமி, நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகம் நடந்தது உறுதியானது.

6 வயதில், சிறுமி முதலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அவர் தனது 6, 7 மற்றும் 8 ஆம் ஆண்டு கற்கைக்காலத்தில் அந்தப் பகுதியில் பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறுமியின் தந்தை குடிக்கு அடிமையானவர். சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பின்னர் 6 வயதில் முதலில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய்க்கு 39 வயது. தந்தைக்கு 42 வயது. 3 வருடங்களின் முன்னர் மற்றொரு பிரசவத்திற்காக தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போத, சிறுமியை தந்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தற்போமு கைதானவர்களில் சிறுமியின் அத்தையும் உள்ளடங்குகிறார். 32 வயது காதலனுடன் சிறுமி தங்க ஏற்பாடு செய்த கொடுத்த குற்றச்சாட்டை அவர் எதிர்கொள்கிறார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad