கிணற்றுக்குள் விழுந்த 30 பேர். இருவர் மரணம்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் விழுந்த கிராம மக்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றுள்ளனர். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது.

இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டதாகவும், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் கிணற்றுக்குள் சிக்கியியுள்ள 15க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad