பிறந்த குழந்தைக்கு தாய் செய்த கொடூரம் !

கந்தளாய் - பேராறு பிரதேசத்தில் பிறந்த பெண் சிசுவை கொலை செய்து தீ வைத்து எரித்த தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனவது முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பேராறு மத்ரஸாநகர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சுபியான் பாரூக் பௌமியா என்ற பெண்ணே இம்மாதம் 28 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தவறான உறவின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த சிசுவை குறித்த பெண் கொலை செய்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியவந்த நிலையில் மூன்று பிள்ளைகளின் தாயான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபரின் கணவர் வெளிநாட்டிலிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.