சில கட்டுப்பாடுகளில் தளர்வு - புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது


நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாடுகள் இன்று(10) முதல் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண வைபவங்களையும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மண்டபக் கொள்ளளவில் 25 சதவீதமானோருடன் மட்டுமே நடத்த முடியும்.

அதாவது அதிகபட்சமாக 150 பேருடன் திருமண வைபவங்களை நடத்த முடியுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, 5 - 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 720 156 146 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.