குழந்தையை பெற்றெடுத்த சிறுமி- விசாரணையில் தெரிய வந்த உண்மை !

 


பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்ட நிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், தற்போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

பேரதிர்ச்சியடைந்த தாய் ஒன்றும் புரியாமல் திகைத்துள்ளார். குறித்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்பு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் விசாரணையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மாற்றுத்திறனாளியான குருசாமி(49) என்பவர் சிறுமியை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து குருசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்துள்ள நிலையில், சிறு வயதிலேயே குழந்தையை பெற்றெடுத்த சிறுமியையும் அந்த குழந்தையும் காப்பகத்தில் ஒப்படைக்க பொலிசார் திட்டமிட்டுள்ளனர். 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad