சீனாவில் குரங்குகளைத் தாக்கிய வைரஸ் மனிதர் ஒருவரை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த 53 வயது கால்நடை மருத்துவர் ஒருவர், இறந்துபோன இரண்டு குரங்குகளுக்கு கடந்த மார்ச் மாதம் பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
இதனை அடுத்து அவருக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், மே மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ததில், குரங்குகளை தாக்கும் BV என்னும் வைரஸ் அவரை தாக்கி இருந்ததும், அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வைரஸால் தாக்கப்பட்ட குரங்குகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும்பட்சத்தில் இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவ கூடும் எனவும், இதனால் 70 முதல் 80 % வரை மரணம் நிகழக்கூடும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த BV வைரஸால் மனித இனத்தில் ஏற்படும் முதல் மரணம் இதுவாகும்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராதநிலையில், மேலும் ஒரு வைரஸ் தாக்குதலால் மரணம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.