யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவனின் வெறியை அடக்க கொட்டிலுக்குள் அக்கா!!

இளைஞன் ஒருவர் அத்துமீறி தனது வீட்டிற்குள் நுழைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக இளம் பெண்ணொருவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

நேற்று முன்தினம் (9) இரவு இந்த சம்பவம் நடந்தது. “இரவு நேரம் திடீரென ஒருவர் என்னை கட்டிப்பிடித்தார். அவருடன் சண்டையிட்டேன். அதனால் நிலத்தில் விழுந்து விட்டேன். அப்போது திருகுவளையில் தலை அடிபட்டு மயக்கமடைந்த  விட்டேன். சுமார் 30 நிமிடத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த போது, எனது ஆடைகள் விலகியிருந்தன“ என 35 வயதான திருமணமாகாத பெண்ணொருவர் முறைப்பாடளித்துள்ளார். இதையடுத்து 30 வயதான இளைஞன் கைதாகியுள்ளார். 

இன்று அவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். வல்வெட்டித்துறை பொலிசார் தாக்கல் செய்த பி அறிக்கையில் பாலியல் தொல்லையளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

குறிப்பிட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினர் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். அயலிலுள்ள இன்னொரு வீட்டில் ஆடு வளர்க்கிறார்கள். அந்த பெண் இரவு வரை அங்கு நின்று ஆடுகளிற்கு

தீவனமிட்ட பின்னர், உறக்கத்திற்கு பெற்றோரின் வீட்டுக்கு செல்வது வழக்கமென கூறியுள்ளார். சம்பவ தினத்திலன்று மகள் வீடு திரும்பாததால், இரவு 10 மணியளவில் தாயார் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். 

அவர் திடீரென நுழைந்த போதுதான், இந்த சம்பவம் நடந்தது. நேற்று அதிகாலை 2 மணிக்கு அந்த பெண் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் சென்று இந்த முறைப்பாட்டையளித்தார்.

கைதான இளைஞன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த 10 நாட்கள்தான் ஆகியுள்ளன. இந்த நாட்களில் முறைப்பாட்டாளரான பெண்ணுடன் தனக்கு பரிச்சயம் உள்ளதாகவும், அவரது அழைப்பிலேயே அந்த வீட்டிற்கு வந்ததாகவும் இளைஞன் வாக்குமூலமளித்துள்ளார்.

குறிப்பிட்ட இளைஞனும், பெண்ணும் நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக முற்படுத்தப்பட்டிருந்தனர்.

இதே வேளை குறித்த பெண்ணான பக்கத்துவீட்டு அக்காவும் பக்கத்து வீட்டு வெளிநாட்டு தம்பியும் உறவு கொண்டிருப்பதை நேரில் பார்த்த பெண்ணின் தாயாரே திருகுபலகையால் பெண் மீதும் இளைஞன் மீதும் தாக்குதல் நடாத்தியதாகவும்  பெண்ணுக்கு கடும் காயம் ஏற்பட்டதாலேயே பெண் மயங்கியதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.