விவாகரத்து கேட்டு வக்கீலிடம் சென்ற பெண்-வக்கீலின் கீழ்தரமான செயல்!

 


விவாகரத்து கேட்டு வந்த பெண்ணை மயக்கமருந்து கொடுத்து மோசமாக கொடுமைபடுத்திய வக்கீலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவள்ளூரை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்வதற்காக, டார்ஜன் என்ற வக்கீலை அணுகியுள்ளார்.

பெண்ணின் அழகில் மயக்கிய குறித்த வக்கீல் வழக்கை தான் எடுத்துவதாக கூறியதோடு, தேவையான ஆவணங்களை நானே தங்களது வீட்டிற்கு வந்து வாங்கிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அப்பொழுது தான் வாங்கி சென்ற குளிர்பானத்தினை குறித்த பெண்ணிற்கு குடிக்க கொடுத்துள்ளார். அதில் தூக்க மாத்திரை ஏற்கனவே கலந்து வைத்திருந்த நிலையில், பெண்ணும் மயங்கியுள்ளார்.

பின்னர் அப்பெண்ணை ஆடை இல்லாமல் புகைப்படம் எடுத்ததோடு, அவரை வன்கொடுமையும் செய்துள்ளார்.

மயக்கம் தெளிந்து பெண் எழுந்திருந்ததும், வக்கீல் தான் எடுத்து வைத்திருந்த நிர்வாண புகைப்படத்தினை காட்டியதோடு அவரை பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அப்பெண் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் தொடர்ந்தும் பணம் கேட்டு மிரட்டியதால், குறித்த பெண் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பொலிசார் குறித்த வக்கீலை கைது செய்துள்ளனர். வக்கீலின் இந்த கீழ்தரமான செயலுக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad